Thursday, 12 December 2013

விஸ்வகர்ம பெருமக்களுக்கு சமர்ப்பணம்.


இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||
விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||
இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:

தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.
பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:
1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.
2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.
4) சில்பி :         ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.
5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ணரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.
ஆதாரம்: விஸ்வகர்மா விஜயபிரகாஷ், ஆசிரியர்: இந்திரதேவ்சர்மா
இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.
கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்
2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்
3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்
4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்
5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்
வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.
ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.
வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.
1) தமிழகம் :
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
2) ஆந்திர மாநிலம் :
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.
3) கேரளம் :
கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
4)கர்நாடகம்:
கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
5) கோவா:
கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.
6) ராஜஸ்தான்:
ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.
சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.
எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.
டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாறு:

சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…
பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.
பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.
வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.

ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம:


ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவாறு:
தேவ சிற்பி என்று புகழப்படும் ஸ்ரீ விஸ்வகர்மாவே ஸநாதனமான ஸப்த ரிஷிகளுக்கும் முதன்மையானவர். பிரபாஸூக்கும், யோக சித்தைக்கும் மகனாய் அவதரித்தவர். யோக சித்தை மஹா பிரஹஸ்பதியின் சகோதரி. பிராஸ் அட்டம பஸூவின் எட்டாம் தலைமுறை ரிஷிகுமாரர்.
ரிக் வேதம் விஸ்வகர்மாவைப் புகழ்வதைக் கண்ணுறுங்கள்:
  • முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா. (ரிக் வேதம் 10.81.03)
  • இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.
  • நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.
  • அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.
  • சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.
  • தெய்வங்களுக்கு ஆயுதங்களையும் செய்தளித்தருளியவர். குறிப்பாக இந்திரனுக்காக ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தையும், விஷ்ணுவிற்காக சாரங்கம் என்னும் வில்லையும், சிவபெருமானுக்காக பிங்களம் என்னும் வில்லையும் படைத்தளித்தவர்.
  • சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை ஸமுத்திரத்தின் மத்தியில் படைத்தவர்.
  • இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் வல்லமையுள்ள நளன் என்னும் வானரத்தைப் படைத்தவர்.
  • ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான துவாரகையையும், எமபுரத்தையும் சிருஷ்டித்தவர்.
இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்.
வசிஸ்ட புராணம் (3.6.11)ல் கூறப்பட்டுள்ளவாறு,
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவானவர், தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து பிரம்மாக்களை படைத்தார். பஞ்ச பிரம்மாக்கள் என்றும் பஞ்ச பிரம்ம ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள்:
1. சானக பிரம்ம ரிஷி,          2.ஸநாதன பிரம்ம ரிஷி,                3. அபுவநஸ பிரம்ம ரிஷி,         4. ப்ரத்னஸ பிரம்ம ரிஷி,       5. ஸூபர்ணஸ பிரம்ம ரிஷி
ரிக் வேதம் (10.81. மற்றும் 10.82) ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவின் சொரூபத்தை சித்தரிக்கிறது:
          உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் ரூபத்தைப் புகழ்கின்றன.
நான்கு கரங்களையுடைத்தும், மணிமுடி தரி்த்தும், மணம் நிறைந்த மலர்களைச்சூடியும், பட்டாடை உடுத்தும், நவரத்ன சிம்மாஞஸத்தில் வீற்றும், தனது நான்கு கரங்களில் புனிதநீர்க் கமண்டலமும், ஒலைச்சுவடியும், பாசக் கயிறும், அளக்கும் கருவியும் தாங்கியவராய் வேத-புராண-சாஸ்த்ரங்களிலே வர்ணிக்கப்படுகிறார்.

Like this:

ஸ்ரீவிஸ்வகர்மா

 
 ஸ்ரீ விஸ்வகர்மா

 
 
 
பிரகாசம் பொருந்திய ஜோதிமயமான
ஞானத்தையே தானாக கொண்டவரும்,
அண்டசராச்சரம் அனைத்திற்க்கும் காரணகர்த்தராயும்,
ஆதி இறைவனாகவும்,
யோகம் ஞானம் முதலிய பல ஆகம சாஸ்திரங்களை,
அறிவித்தவரும் பரமஸிவமும் குருவானவரும் சாட்சாத்
ஸ்ரீ விஸ்வகர்மாவாகும்
 (மூலஸ்தம்பம்)

ஸ்ரீவிஸ்வகர்மாவின் சகல வடிவ அலங்காரங்களையும்
நாராயண  தைத்ரீய சதுர்த்த  ப்ரவசனம்  ஆகிய 
 "கிருஷ்ண யஜுர்"  வேதத்தில் ஸ்தோத்திரமாக  துதிக்கப்படுகிறது.
இதுவே ஸ்ரீ விஸ்வகர்மாவின்
பூரண  சமஸ்த  இலட்சணமான  திருவடிவமாகும்

"விஸ்வபிரம்மம்' என்றும் "ஜகத்குரு" என்றும் போற்றப்படுகின்ற 
ஆதியாய்  இருக்கின்ற  ஸ்ரீ விராட் விஸ்வப்பிரம்மம்
ஐந்து முகங்களை கொண்டும் சடா மகுடங்களை உடைய அவருடைய,

ஸத்யோஜாதமுகம்,வெண் நிறமுடையது கிழக்கு முகம்.
வாமதேவ முகம் கருநீல நிறமுடையது தெற்கு முகம்
அஹோரம் முகம் சிகப்பு நிறம் கொண்டது மேற்கு முகம்
தத் புருஷம் முகம் மஞ்சள் நிறம் உடையது வடக்கு முகம்
ஈசான முகம் பச்சை நிறம் உடையது ஆகாய முகம்

சரீரம் பொன் நிறமானது, பத்து புஜங்களை உடையவரும்,
பிரகாசிக்கும் குண்டலங்களை காதில் தரித்தவரும்
பொன்னாலான பீதாம்பரத்தை
உத்திரீயமாய் உடையவரும்,
நாகங்களாகிய  யஞ்ஞோப வீதத்தைக்
கொண்டவரும், உருத்திராட்ச மாலையை ஆபரணமாய் பூண்டும்,
புலித்தோல் ஆடையை தரித்தும்,  ஒரு கரத்தில் அட்ச்ச மாலையும்,
ஒரு கரத்தில் தாமரையும்,  ஒரு கரத்தில்  நாகபாசமும்,  ஒரு கரத்தில்
சூலமும் ஒரு கரத்தில் பினாக வில்லும், ஒரு கரத்தில் மேரு வீணையும்,
ஒரு கரத்தில் பானமும், ஒரு கரத்தில் உடுக்கையும்,  இரண்டு கரங்களில்
சங்கு சக்கரமும் தாங்கியவரும், புகழும் படியான தோற்றமும்,
கோடி சூர்யர்கள் ஒருங்கே உதயமானது போல் பிரகாசிப்பவரும்,
எல்லா உயிர்களிடமும் கருணை கொண்டவரும், தேவர்கட்கும்,
மூவர்கட்கும் தேவனான, மஹா தேவனுமாகிய ஸ்ரீ விஸ்வகர்மப் ப்ரம்மம்,
ஜகத்குருவாகவும், நான்கு திசைகளையும், ஆகாயத்தையும்  நோக்கிய 
ஐந்து  முகங்களைக்  கொண்ட சர்வ  வியாபகருமாகிய
ஸ்ரீ விஸ்வகர்மாவைத் துதிக்கின்றோம் என்பதாகும்.

விஸ்வபிரம்மம்' ஜகத்குரு ஸ்ரீ விஸ்வகர்மா என வேத
இதிகாச புராணங்களில் போற்றப்படுகின்ற 
ஸ்ரீ "விஸ்வபிரம்மம்'   லோகங்களைப் படைத்தபின்
அதை பரிபாலிக்கின்ற விதமாக முதலில் தன் மானச சிருஷ்டியால்
சுயம்புவாய்  தோன்றியவர்கள் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகள்,
பின் அவர்களின்  தோன்றல்கள் வழி வழியாக விஸ்வகுலம்,
பல விருட்சமாகி விரிந்து பரந்து உள்ளது.

ஸ்ரீ விஸ்வகர்மாவின்,
வெண்ணிற சத்யோஜாதகம் கிழக்கு முகதியானத்தால்
உருத்திர ரூபமுடைய சானக ரிஷி பின் மனு தோன்றி
ரிக் வேதத்தால் பூஜிக்கப்பட்டார்

கரு நீலநிற வாம தேவமுகம் தெற்கு முக தியானத்தால்
விஷ்ணு ரூபமுடைய சனாதனரிஷி பின் மயா தோன்றி
யஜுர்வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

சிகப்பு நிற அகோரம் மேற்கு முக தியானத்தால்
பிரம்ம ரூபமுடைய அபுவனஸரிஷி பின் துவஷ்டா தோன்றி
சாமவேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

மஞ்சள் நிற தத் புருஷம் வடக்கு முக தியானத்தால்
இந்திர ரூபமுடைய பிரத்தனஸரிஷி பின் ஸில்பி தோன்றி
அதர்வண வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

பச்சைநிற ஈசானம் ஆகாய முக தியானத்தால்
ஸூர்ய ரூபமுடைய சுபர்ணரிஷி பின்விஸ்வக்ஞ தோன்றி
பிரணவ வேதத்தால் பூஜிக்கப்பட்டார்.

(இதை யஜுர் வேத எக்ஞ் மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது)



"ஜாதம் பஞ்சப்ரம்ம  குலம்  ஸ்ந்ததெள  விஸ்வகர்மண
நித்திய கர்மாஷ்டகயுதம் கர்ம சோடச நிஷ்டிதம்  
மனு மயா ஸ்ததா த்வஷ்டா ஸில்பி விஸ்வக்ஞ்யித்யபி
விஸ்வகர்ம சுதாஹ்தே பஞ்சஸ்ருட்டி ப்ரவர்ததக."

என்று ஸ்காந்தம் நாகர காண்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்மாவின்
புத்திரராக ஜனித்த மனு, மய, த்வஷ்டா, ஸில்பி விஸ்வக்ஞ,
எனும் விஸ்வகுல சந்ததியர்களே,
உலகச் சேமங்களைக் கருதி பஞ்சகிர்த்திய தொழில்களைப் புரிந்து ஜகத்,
ஜீவ  சிருஸ்டிகளை  ஒருங்கே கொண்டு 
ஸ்ரீ விஸ்வப்ப்ரம்ம சந்ததியரேனவும்   போற்றத்தக்க  
விஸ்வகர்ம பிராமணர்கள் என வேத சம்மதமாக   
அழைக்கப்பெற்றனர்.இதுவே இப் பூவுலகில் ஐந் தொழிலைத்
தமது உரிமையாகக், உடமையாகக் கொண்டு தொழில் நடத்தி வாழ்ந்து
வரும் விஸ்வகுலத்தவரின்  வரலாறு ஆகும்.

 

விஸ்வஹர்மா

விஸ்வகர்மா வரலாறு...

       சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேசத்தின் ஆணிவேராகவும், எல்லா கலைகளுக்கும் மூலவித்தாகவும், ஹிந்து மதத்தின் தலைமகனாகவும், 2300 வருடங்களுக்கு முன் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் முதல் தற்போது இந்தியாவிற்கு சுற்றுபயணம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் வரை வந்து பிரமித்து பார்க்கும் அனைத்து கலைப் பொக்கிஷங்களையும் படைத்து இந்தியாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த நம் விஸ்வகர்மா சமுதாயத்தின் இன்றைய வீழ்ச்சிக்கும், முன்னேற்றமின்மைக்கும், ஒற்றுமையின்மைக்கும் மிக முக்கிய காரணம் நம் விஸ்வகர்மா இன மக்கள் தங்கள் குலக்கடவுளான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் உரிய முக்கியத்துவம் தராமல் மறந்து போனது தான் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஸ்வகர்மபுத்ர மகரிஷி அவர்கள் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.

   தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாழும் 65மூ ஐந்தொழில் விஸ்வகர்மா இன மக்களுக்கு தங்கள் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மா மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவி என்பதே தெரியாமல் வாழ்கிறார்கள். இதில் மீதி 30மூ பேர் கூட ஸ்ரீசதாசிவமூர்த்தியை தான் ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்குகிறார்கள். தன் ஐந்து நெற்றிகளில் திருநாமம் அணிந்தவர் தான் ஸ்ரீவிஸ்வகர்மா (படைப்புக் கடவுள்) மாறாக, விபுதி பட்டை அணிந்தவர் ஸ்ரீசதாசிவமூர்த்தி (அழிக்கும் கடவுள்). நம்மவர்கள் பெரும்பாலும் ஸ்ரீசதாசிவமூர்த்தியையே ஸ்ரீவிஸ்வகர்மா என்று நினைத்து வணங்கி வருகிறார்கள். இது இரு பெரும் கடவுள்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் இது ஏற்படுத்தப்பட்ட குழப்பம். ஸ்ரீவிஸ்வகர்மாவின் முக்கிய ஆயுதமான சுத்தியல் ஸ்ரீசதாசிவமூர்த்தியின் கரங்கள் எதிலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கவனிக்கத்தக்கது. ஆதியில் சிவபெருமானும் நாமத்துடன் தான் ஸ்ரீவிஸ்வகர்மாவால் படைக்கப்பட்டார் ஆனால் பிறகு வந்த காலத்தி்ல் தனது அழிக்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை உலகிற்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும் பொருட்டே சிவபெருமான் தான் அழித்தப் பொருட்களின் சாம்பலை எடுத்து விபுதியாகப் புசிக் கொண்டார் என்பது வரலாறு.
ஸ்ரீவிஸ்வகர்மா

ஸ்ரீசதாசிவமூர்த்தி
    உலகின் முதல் வேதமான ரிக் வேதம் ஸ்ரீவிஸ்வகர்மா-வை அனைத்து கடவுள்களையும் படைத்தவர் என்றும் அவர்களுக்கு பெயரிட்டவர் என்றும் பிரபஞ்சத்தின் மூலக்கருவையே தோற்றுவித்தவர் என்றும் 10ம் அதிகாரம் முழுவதும் தெளிவாக கூறுகிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, யஜுர், சாம, அதர்வணம் என அனைத்து வேதங்களும் நம் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவை துதிப்பாடுகின்றன. எந்த யாகம் நடத்தப்பட்டாலும் அதில் ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கு உரிய அவில்பாகம் கொடுக்கப்படுகிறது. எந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தாலும் புனித நீரை நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பெயரை சொல்லி தான் தெளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த கடவுளை நாம், அதாவது அவரின் குழந்தைகள் மறந்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.
நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் 11ம் நுரற்றாண்டில் செய்து வைத்த தவறான, குழப்பமான மற்றும் நம் சமுதாயத்தையே வேரறுக்கும் அளவிற்கு நம்மையும் நம் குலக்கடவுளையும் பிரித்து வைக்கும் படியான வழிபாட்டு முறையை தான் நாம் தற்போது பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்த தவறான முறையால் நாம் நம் கடவுளை மறந்து விட்டோம் அல்லது இழந்து விட்டோம் அல்லது தவறாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த காலக்கட்டத்தில் தான் நமது ஸ்ரீவிஸ்வகர்மாவின் புகழைப்பரப்பி வந்த நமது மடங்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக சைவ(சிவ)மடங்களாக மாற்றப்பட்டன. அங்கு சிவபெருமானுக்கும், லிங்கத்திற்கும் தான் முக்கியத்துவம் தரப்படும் படி செய்யப்பட்டன. இதன்படி ஸ்ரீவிஸ்வகர்மாவை மறக்கடிக்க செய்து விட்டனர். நம்மையும் நம் கடவுளையும் பிரித்து வைக்கும் அந்த தவறான முறையை மாற்றி அமைத்து மீண்டும் நம் விஸ்வகர்மா இன மக்களை அதாவது ஸ்ரீவிஸ்வகர்மாவின் குழந்தைகளை மீண்டும் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்களாக மாற்றுவதே எங்களின் புனிதமான லட்சியமாகும்.
    நம்மவர்கள் மற்ற கடவுள்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நம் குலக்கடவுள்களான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் அளிப்பது கிடையாது. ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்கள் என்றால் மற்ற கடவுள்களை வணங்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அப்படி சொல்வது மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம். அப்படி நாங்கள் சொல்லமாட்டோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஆயிரம் கடவுள்களை கூட வணங்குங்கள் தவறில்லை. ஆனால் நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவையும் ஸ்ரீகாயத்ரி தேவியையும் வணங்காமல் அல்லது தவறாக ஸ்ரீசதாசிவமூர்த்தியை ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்கி விட்டு ஆயிரம் கடவுள்களை வணங்கி என்ன பயன்? என்று தான் கேட்கிறோம்.
    நாம் சைவ மதமா? வைணவ மதமா? என்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர்களே சந்தேகத்துடன் கேட்கிறார்கள். உண்மையில் நாம் சைவ மதமும் அல்ல (அனைத்தும் ஒரு நாள் சாம்பலாகும் என்ற கொள்கை) வைணவ மதமும் அல்ல (நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நாம் செய்ய வேண்டும் என்ற கொள்கை). நாம் படைப்பவர்கள். நாம் தனி மதம். சிவபெருமானை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைணவம், சக்தியை வணங்கும் சாக்கியம், விநாயகரை வணங்கும் கணபாத்தியம், சூரியபகவானை வணங்கும் சௌமாரம், முருகப்பெருமானை வணங்கும் கௌமாரம் போல விஸ்வகர்மா என்பது ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் மற்றும் ஐந்து ரிஷிகளையும் வழிபடும் தனி மதம் அதுவும் விஸ்வகர்ம மதம் என்பது ஹிந்து தர்மத்தின் முதல் மதம். இதை மறந்து விட்டு நாம் அடிப்படையிலேயே தவறு செய்கிறோம்.
    அது எந்த அளவிற்கு நம்மையும், நம் தலைமுறைகளையும் பாதிக்கிறது என்பதையும் உணராமல் வாழ்கிறோம். ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் முறையாக வணங்கி வரும் நம் ரத்த சொந்த பந்தங்களான வட இந்திய விஸ்வகர்மாக்கள் தங்கள் தொழில்கள் உள்பட அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்பட பலவற்றை ஆரம்பித்து வட இந்தியாவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். மற்ற சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட உதாரணமாக திகழ்கிறார்கள். நாமும் நம் கடவுள்களை வணங்க ஆரம்பித்தால் வாழ்வில் என்றென்றும் சுபிட்சமும், உண்மையான நிம்மதியும், நிலையான சுபிட்சமும் பெறலாம்.


     நாம் புனிதமான விஸ்வகர்மாக்கள், மற்றவர்களைப் போல பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள் அல்ல. உயர்ந்த கடவுளின், அதுவும் எல்லா கடவுள்களையும் படைத்த ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவின் ஐந்து தலைகளில் இருந்து நேரடியாக படைக்கப்பட்டவர்கள். நமக்கு என்று தனியாக நியதிகள், முறைகள், குல மரபுகள், தனி அடையாளங்கள் உண்டு. மற்றவர்கள் போல் நாம் நடந்து கொண்டால் அதில் நமக்கு பலன்கள் கிடையாது அல்லது குறைவு. நாம் யார் என்பதை உணர்ந்தால் தான், நாம் யாருடைய ரத்தம் என்பதை உணர்ந்தால் தான், நமது குலமரபுகளை நாம் பின்பற்றினால் தான, நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும். நம் முன்னோர்களைப் போல காலத்தால் அழியாத கலைப் படைப்புகளை ஏன் தனி சரித்திரத்தையே கூட படைக்க முடியும்.